பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான மக்களோடு நினைவு கூறப்பட்ட மாவீரர் நாள்!

You are currently viewing பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான மக்களோடு நினைவு கூறப்பட்ட மாவீரர் நாள்!

விடுதலைக்காய் களமாடி விதையான மாவீரர்களை வணங்கி உறுதி எடுக்கும் நாள்  தமிழீழ தேசிய மாவீரர் நாள். வழமை போன்று பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் எக்ஸல் மண்டபத்தில் 2021 ஆம் ஆண்டிற்க்கான தமிழீழ தேசிய மாவீரர் நாள் உணர்வெழுச்சி பூர்வமாக பல்லாயிரக்கணக்கான மக்களோடு நினைவு கூறப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான மக்களோடு நினைவு கூறப்பட்ட மாவீரர் நாள்! 1

நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை தளபதி கேணல் கிட்டு அண்ணா அவர்கள் பிரித்தானியாவில் பணி புரிந்த காலம் தொடக்கம் தமிழர் கலை பண்பாட்டுக் கழகதோடு பணி புரிந்தவரும் தமிழின உணர்வாளரான திருமதி ராகினி ராஜகோபால் அவர்கள் பொதுச் சுடரினை எற்றிவைத்தார்கள். பிரித்தானிய தேசியக் கொடியினை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி பாப்ரா ராஜன் ஏற்றி வைத்தார். தமிழீழ தேசியக் கொடியினை  தமிழர் ஒருங்கிணைப்பு பிரித்தானிய பொறுப்பாளர் திரு ஆனந்தன் அவர்கள் ஏற்றி வைத்தார்கள் அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான மக்களோடு நினைவு கூறப்பட்ட மாவீரர் நாள்! 2
பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான மக்களோடு நினைவு கூறப்பட்ட மாவீரர் நாள்! 3
பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான மக்களோடு நினைவு கூறப்பட்ட மாவீரர் நாள்! 4

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2021 பகுதி-2 (ஈகைச்சுடரேற்றல்)

தமிழர் ஒருங்கிணைப்பு குழு – லண்டன் எக்ஸல்

தலைவன் கட்டிய பாதையிலே விடுதலை தேடி வீறு நடை போட்டு அடிமை விலங்கு உடைக்க அறத்தின் வழி நின்று அல்லும் பகலும் தமிழ் மண் காக்க விழித்திருந்த அந்தவீர மறவர்கள் எம் மாவீரர்களை அகத்தில் இருத்தி 2021 ஆம் ஆண்டிற்கான தமிழீழ தேசிய மாவீரர் நாளினை வழமைபோல் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் எக்ஸல் மண்டபத்தில் நினைவு கூறப்படுகின்றது.
தமிழ் இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர்களினால் கொடிவணக்கம் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஈகைச்சுடரிக்கான ஆயத்த மணி 12:35 மணித்துளிகளில் ஒலி எழுப்பப்பட்டு தாயக மண்ணுக்காக தம் உயிரை ஈந்த நம் மாவீரச்செல்வங்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான மக்களோடு நினைவு கூறப்பட்ட மாவீரர் நாள்! 5

தொடர்ந்து 12:37 மணித்துளிகளில் துயிலுமில்ல பாடல் ஒலித்த சம நேரத்தில் ஈகைச்சுடரினை மாவீரர்களை நினைவில் நிறுத்தி உன்னதமான ஈகை சுடரினை ஈகைச் சுடரினை 29/04/2009ல் வீரச் சாவாடைந்த கதிரவன் என அழைக்கப்படும் கந்தசாமி ரகுவின் தாயாரும் 27/04/2009ல் வீரச் சாவடைந்த லெப் கேர்ணல் ஜெயந்தி என அழைக்கப்படும் அமுதராணி ரகுவின் மாமியாருமாகிய திருமதி. கமலாவதி கந்தசாமி அவர்கள் ஏற்றி வைத்தார். ஏற்றியதைத் தொடர்ந்து கல்லறைகளுக்கு முன்பாக மாவீரர் குடும்பத்தை சேர்ந்த உறவுகள் எம் மாவீரச்செல்வங்களுக்காக சுடரேற்ற எக்ஸல் மண்டபம் கண்ணீரில் மூழ்க எம் மாவீரர்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து எம் மாவீரச்செம்மல்களின் வீரதீர தியாக நினைவுகளோடு அவர்களுடைய திருவுருப்படங்களுக்கு செங்காந்தள் மலர்கள் தாங்கி கனத்த மனதோடு வணக்கம் செலுத்தப்பட்டது 

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான மக்களோடு நினைவு கூறப்பட்ட மாவீரர் நாள்! 6
பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான மக்களோடு நினைவு கூறப்பட்ட மாவீரர் நாள்! 7
பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான மக்களோடு நினைவு கூறப்பட்ட மாவீரர் நாள்! 8
பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான மக்களோடு நினைவு கூறப்பட்ட மாவீரர் நாள்! 9
பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான மக்களோடு நினைவு கூறப்பட்ட மாவீரர் நாள்! 10
பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான மக்களோடு நினைவு கூறப்பட்ட மாவீரர் நாள்! 11
பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான மக்களோடு நினைவு கூறப்பட்ட மாவீரர் நாள்! 12
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments