புனானை விபத்தில் இருவர் பலி!

You are currently viewing புனானை விபத்தில் இருவர் பலி!

மட்டக்களப்பு- வாழைச்சேனை பிரதான வீதியில் புனாணை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் மரணமடைந்துள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

புத்தளம் சிலாபம் பகுதியிலிருந்து காத்தான்குடி நோக்கி சென்ற வானும் கல்முனையிலிருந்து கதுறுவெல நோக்கி பயணித்த பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதியதிலே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இவ் விபத்தில் வான் சாரதி உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதுடன், வானில் பயணித்த 5 பேர் காயங்களுக்குள்ளாகி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

புனானை விபத்தில் இருவர் பலி! 1

 

 

புனானை விபத்தில் இருவர் பலி! 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments