பேஸ்புக்கின் கறுப்புப்பட்டியலில் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் உட்பட்ட 4000 நபர்கள்!

You are currently viewing பேஸ்புக்கின் கறுப்புப்பட்டியலில் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் உட்பட்ட 4000 நபர்கள்!

முகநூல் நிறுவனத்தின் 100 தீவிரவாத அமைப்புக்கள் மற்றும் பயங்கரவாதம், குற்றம் என வகைப்படுத்தப்பட்ட இரகசிய கறுப்புப் பட்டியலில் தமிழீழ விடுதைலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர்கள் உட்பட்ட நான்காயிரம் நபர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புடைய நபர்கள் என்ற வகைப்படுத்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அரசியல் துறைப் பொறுப்பாளர்கள், பா.நடேசன், சு.பா. தமிழ்ச்செல்வன், மற்றும் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த இராசையா பார்த்தீபன் (திலீபன்) உள்ளிட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயிரிழந்த தளபதிகள் உள்ளிட்டவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2012 -ஆம் ஆண்டு பேஸ்புக்கின் இரகசிய கறுப்புப் பட்டியலில் வகைப்படுத்தப்பட்ட தீவிரவாத, வெறுப்புனா்வைப் பரப்பும் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் பட்டியலை https://theintercept.com என்ற புலனாய்வு இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

இதில் தீவிரவாத அமைப்புக்கள், தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் குற்றம், வெறுப்பு, இராணுவமயமாக்கப்பட்ட சமூக இயக்கம், வன்முறை போன்ற வகைப்படுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.

அதில் ஆபத்தான பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புக்கள் என்ற பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீந்த இராசையா பார்த்தீபன் (திலீபன்) உள்ளிட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயிரிழந்த தளபதிகள் உள்ளிட்டவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வேலுப்பிள்ளை பிரபாகரன்,

இராசையா பார்த்திபன்,

பிரிகேடியர் பால்ராஜ்,

சார்ல்ஸ் லூகாஸ் அன்ரனி,

கோபாலசுவாமி மகேந்திரராஜா,

மரியா வசந்தி மைக்கேல்,

இராசையா பார்த்திபன்,

சு.ப.தமிழ்செல்வன்,

சதாசிவம் கிருஷ்ணகுமார்,

சண்முகலிங்கம் சிவசங்கர்,

சண்முகம் குமரன் தர்மலிங்கம்,

சண்முகரந்தன் ரவிசங்கர்,

தில்லையம்பலம் சிவேநேசன்,

துர்கா,

வைத்திலிங்கம் சொர்ணலிங்கம்,

வல்லிபுரம் வசந்தன்,

வீரகத்தி மணிவண்ணம்,

வேலாயுதபிள்ளை பகீரதகுமார்,

விதுஷா,

அகிலா,

பாலசிங்கம் நடேசன்,

பேரின்பநாயகம் சிவபரன் உட்பட்டோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கின் கறுப்புப்பட்டியலில் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் உட்பட்ட 4000 நபர்கள்! 1
பேஸ்புக்கின் கறுப்புப்பட்டியலில் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் உட்பட்ட 4000 நபர்கள்! 2

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments