போதைப்பொருளை பாவிப்போர் கடத்துவோருக்கு பள்ளிவாசல் கடும் எச்சரிக்கை!

You are currently viewing போதைப்பொருளை பாவிப்போர் கடத்துவோருக்கு பள்ளிவாசல் கடும் எச்சரிக்கை!

போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள், விற்பவர்களின் வீடுகளில் நடைபெறும் திருமணம், ஜனாஸா கடமைகளுக்கு தமது ஒத்துழைப்பினை வழங்கப்போவதில்லை என புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜூம்மா பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜூம்மா பள்ளிவாசல் மேற்கொண்டுள்ள இந்த தீர்மானத்தை எதிர்வரும் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள், அதனை வியாபாரம் செய்பவர்களின் ஜனாஸாக்கள் தங்களின் மையவாடியில் அடக்கம் செய்யப்பட மாட்டாது எனவும் பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

அவ்வாறானவர்களின் பெயர் விபரங்கள் விளம்பர பலகை மூலம் காட்சிப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைப்பாட்டை சைவ கத்தோலிக்க ஆலயங்களும் கையில் எடுக்குமா?என்ற எண்ணப்பாடு சமூக ஆர்வலர்களிடையே மேலோங்கியுள்ளது ஆலய நிர்வாகங்கள் முன்நிற்குமா என்பதுதான் கேள்விக்குறியாகின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments