போதைப்பொருள் விற்பனை: பெண் கைது!

You are currently viewing போதைப்பொருள் விற்பனை: பெண் கைது!

வாழைச்சேனை சிறீலங்கா காவற்துறை பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 42 வயது பெண்ணொருவர் நேற்று  (3) கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் 08 கிராம் மற்றும் ஐஸ் போதைப்பொருள் 1 கிராம் 400 மில்லி கிராம் என்பன கைப்பற்றப்பட்டுளன.

கைது செய்யப்பட்ட பெண்ணை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த வாழைச்சேனை சிறீலங்கா காவற்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments