போய் வாருங்கள் அப்பா….

You are currently viewing போய் வாருங்கள் அப்பா….

கரிகாலன் படைகளுக்கு

இரண்டு பெரும் வீரர்களை

பெற்றெடுத்த தந்தையே!

தமிழரின் வீரத்தினை

தரணிக்கு நிலைநாட்டிய

உங்கள் வீரப்புதல்வர்களின்

தீரத்தின் நெருப்பு

நெடுஞ்சுவாலையாய்

ஓடும் குருதியெங்கும்

எழுந்தெரிகிறது!

அவர்கள்

ஆடிய வீரகளங்களின்

அழியா நினைவுகளை

அள்ளித்தழுவுகிறது!

கில்மன் தீபன் என்ற

வீரத்தின் வித்துக்கள்

உருவாகிய

விளைச்சல் நிலமாய்

என்றும் நீங்கள்!

துணிச்சல்களின் தந்தையாய்

எங்கள்

குருதிக்கலங்கள் ஓடும்வரை

நினைவுமாளிகையில் அழகான

சிம்மாசனத்தில் இருப்பீர்கள்!

நீங்கள் தீராத தாகத்தில்தான்

இருப்பீர்கள்!

மீளாத துயரில்தான் உயிர்பிரிந்திருப்பீர்கள்!

என்ன செய்ய

நீங்கள் பெற்றவர்கள்போல்

இப்போதில்லையே!

காக்கும் கரங்களாய்

அரவணைத்த உங்கள்

புத்திரர்கள் போல்

சத்தியத்திற்காய் வாழ்தவர்

நித்தியவாழ்வில் இல்லையே!

எங்கு பார்த்தாலும்

நோய் பிடித்த சேவல்களே

கூவுகின்றன!

சாவுக்காய் சபதமெடுத்த

உங்கள் பிள்ளைகள்போல்

இனி இனத்தை காக்க

எவரும் இல்லை என்ற ஏக்கமே நிரம்பிக்கிடக்கிறது!

இப்போதெல்லாம்

பிணி பிடித்த நிலையாய்

பிதட்டத்தான் முடிகிறது!

போய் வாருங்கள் அப்பா!

போர்க்கள நாயகரிடம்

போய் சேருங்கள் அப்பா!

வட போர்முனை கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் மற்றும் திருகோணமலை மாவட்ட சிறப்பு தளபதி லெப். கேணல் கில்மன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆகிய கந்தையா வேலாயுதபிள்ளை அவர்கள் கடந்த(08.12.2022) காலமானார்,என்ற துயரச்செய்தியை தமிழ்முரசம் வானொலி உங்களோடு பகிர்ந்து கொள்கின்றது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments