போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அட்டாளைச்சேனை மீனவர்கள்!

போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக  அட்டாளைச்சேனை மீனவர்கள்!

எமது தொழிலை இலகுபடுத்தும் வகையில் கடற்கரையோரமாக நிர்மாணிக்கப்பட இருந்த வீதியை இடைநிறுத்திய தரப்பினர், மீண்டும் அவ்வீதியை பூரணமாக செப்பமிட்டு உதவ வேண்டும். இல்லாவிடின் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் குறிப்பிட்டனர்.

அம்பாறை மாவட்டம்- அட்டாளைச்சேனை, கோணாவத்தை-8 பகுதியில் வசிக்கின்ற சுமார் 55 படகுகளை கொண்ட மீனவ குடும்பங்கள் கடந்த பல வருடங்களாக சிரமங்களுக்கு மத்தியில் கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த போதிலும், பிடிக்கப்படும் மீன்களை இலகுவாக சந்தைப்படுத்தவும் படகுகளுக்கான எரிபொருள் உள்ளிட்ட இதர பொருட்களை கொண்டு செல்வதற்கு சீரான வீதி இன்மையினால் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments