போர்க்குற்றவாளிகளை தண்டிக்க சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்த வேண்டும்!

You are currently viewing போர்க்குற்றவாளிகளை தண்டிக்க சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்த வேண்டும்!

யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய அலுவலகம் சர்வதேச நியாயாதிக்கத்தையும் பயன்படுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

டுவிட்டர் பதிவில் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளதாவது

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலக அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது போன்று சர்வதேச குற்றங்கள் ,சித்திரவதைகள் பலவந்தமாக காணாமல்போகச்செய்தல் மனித உரிமைமீறல்கள்,மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை; விசாரணை செய்து வழக்கு தாக்கல் செய்யுமாறும் சாத்தியமான சூழ்நிலைகளில் சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்துமாறும் சர்வதேச சமூகத்தை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் நம்பகதன்மை மிக்க உள்நாட்டு பொறிமுறைகள் இல்லாத பட்சத்தில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான ஏனைய சாத்தியக்கூறுகளை ஆராயவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments