போலித்தேசிய வாதிகளை மக்கள் புரிந்துகொண்டார்கள்!

போலித்தேசிய வாதிகளை மக்கள் புரிந்துகொண்டார்கள்!

முப்பது வருடகால அறவழிப்போராட்டம் தந்தை செல்வா வழியில் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் சிங்கள இனவாதபூதத்தால் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வந்தது வரலாறு.

எல்லாவற்றுக்கும் மேலாக அறவழிப்போராட்டம் ஆயுதவழியில் நசுக்கப்பட்டு எமது மக்களின் உயிர்கள் சிங்கள பூதங்களால் விழுங்கப்பட்ட நிலையிலும் வட்டுக்கோட்டையில் தீர்மானத்தில் ஒருமித்த குரலோடு தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழ தமிழீழம்தான் ஒரே தீர்வு என மக்கள் ஆணைகொடுத்ததும் தமிழ்மக்களின் சனநாயகப்போராட்டத்தின் சான்றாக இன்றும் வரலாற்றில் வழிகாட்டியாக இருக்கின்றது.

ஆனாலும் அன்றைய போராட்டத்தின் தலைவராக வழிநடத்திய தமிழரசுக்கட்சியின் தலைவர் தந்தை செல்வா தமிழ்மக்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்ற வார்த்தைகளின் பிரதிபலிப்பாக சிங்களம் ஒருபோதும் தமிழ்மக்களை உரிமையோடு வாழவிடாது என்பதை வெளிப்படுத்தியது.

அத்தோடு இனி தமிழ்மக்களுக்கான போராட்டத்தினை இளைஞர்களே கையிலெடுக்கவேண்டும் என்ற அவரின் எதிர்பார்ப்பே  பிற்காலத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களால் அளப்பரிய அற்பணிப்போடு கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ விடுதலைக்கான தழிழீழவிடுதலைப்புலிகளின் போராடடம்.

இப்போராட்த்தில் பல்லாயிரக்கணக்கில்  போராளிகள் இணைந்து கொண்டு நெறிதவறாத தலைவன் பாதையை பலப்படுத்தினர் வீரம்செறிந்த போராட்டத்தில் அளப்பரிய தியாகங்களைச் செய்து பல்லாயிரக்கணக்கில் விடுதலையின் விதையாக மாவீரர்கள் உறங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

இப்போராட்டத்தினைத்தான் தமிழரசுக்கட்சியின் உறுப்பினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமாகிய சுமத்திரன் சிங்கள ஊடகமொன்றுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தினை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்ததோடு சிங்களக்கொடியை தானும் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்த கருத்தானது மக்களின் மனங்களை காயப்படுத்தியதோடு மட்டுமில்லாது  முப்பதாண்டுகால உயிராயுதப்போரட்டத்தினை உதாசீனம் செய்துள்ளார்.

5வது அகவையில் இருந்து சிங்களத்தோடு கைகோர்த்து வாழ்ந்தவர் சிங்களப்படைகள் நிகழ்திய  கொலைவெறித் தாக்குதலின் வலியை உணராதவர், குண்டுச்சத்தத்தை கேட்காதவர், சுற்றிவளைப்பில் அகப்படாதவர், தனையனுக்கு முன்னால் தாய் பாலியல் பலாத்காரம் செய்யப்படும்போது பார்க்காதவர், சகோதரன் அல்லது சகோதரி ஆகாயவழித்தாக்குதலுக்கு இலக்காகி துண்டு துண்டாக காணாதவர்,  தாய்க்கு முன்னால் பச்சிளம் பாலகனை சுடு எண்ணையில் போட்டபோது பிள்ளையின் உயிர் பொரிந்துபோன வலியை உணராதவர் அப்படித்தான் சொல்லார் என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை

ஆனால் இங்கே கேள்வி என்னவென்றால் தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஏன் பின் கதவால் கொண்டுவரப்பட்டார் என்பதுதான்!

இதைத்தான் மக்கள் சரியாக விளங்கிக்கொள்ளவேண்டும்  உலகத்தோடு இணைந்து தமிழீழ நிழலரசை அழித்ததற்கு பிற்பாடு தமிழ்மக்களின் அரசியல் பலத்தை நிலத்திலும் புலத்திலும் சிதைப்பதற்கான துருப்பு சீட்டாக இந்தியாவாலும் சிறீலங்காவாலும் இறக்கப்பட்டவர்தான் இந்த சுமத்திரன் கடந்த 11 ஆண்டுகளாக இவரது ஆட்டம்தான் சூடுபிடித்திருந்தது.

தமிழ்மக்களின் பாதுகாப்பரணாக இருந்த விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி தமிழ்மக்களை கொத்துக்கொத்தாக இன அழிப்பு செய்த முக்கியமான நாடுகளான இந்தியாவும் சிறீலங்காவும் தம்மை தமிழ்மக்களின் நீதிக்கான போராட்டத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக கட்டிய அரண்களில் சுமத்திரனின் சொல் அம்புகளும் காத்திரமானது.

கடந்த 11 ஆண்டுகளாக ஐநாவிலும் சரி சர்வதேச அரங்குகளிலும் சரி தமிழ்மக்கள் தமக்கிழைக்கப்பட்டது தமிழின அழிப்பு என்பதை திட்டவட்டமாக கூறிவருகின்ற நிலையில்

தாயகத்தில் தமிழ்மக்களை ஏமாற்றி வாக்குக்கேட்டு மக்கள் அங்கிகாரம்பெற்று அரசமரியாதையோடு  ஐநாவிலும் சர்வதேச அரங்கிலும் இவர் பதிவு செய்துவிட்டு போவது அங்கு இனவழிப்பு நடைபெறவில்லை வாகனத்தில் பயணிக்கும்போது தற்செயலாக நடைபெறும் விபத்துபோன்றதுதான் 2009 இல் நடைபெற்ற போரில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டது என்று இன அழிப்பு செய்த நாடுகளை பாதுகாக்கும் பாதுகாவலனாக இதுவரை பணியாற்றினாரே ஒழிய தமிழ்மக்களின் பாது காவலனாக பயணிக்கவில்லை பயணிக்கவும் போவதில்லை என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொண்டார்கள் என்பதற்கான சான்றுதான் காணாமல் ஆக்கப்பட்ட உறவினரின் 1200வது நாளின் போராட்டத்தில் மக்கள் தாங்கி நின்ற பதாகைகளின் செய்தி.

-தூயவன்-

5 3 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments