மகள்களுடன் முதன்முறையாக மேடையில் பாடிய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!

மகள்களுடன் முதன்முறையாக மேடையில் பாடிய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!

மகள்களுடன் முதன்முறையாக மேடையில் பாடிய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகள்களான ரஹீமா மற்றும் கதிஜாவுடன் இணைந்து மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாடினார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தனது மகள்கள் கதிஜா மற்றும் ரஹீமா ஆகியோர் மேடை ஏறுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார் இசைப்புயல். அவரது மகன் ஏ.ஆர். அமீன் தனது தந்தையுடன் சில தடவைகள் மேடை ஏறியுள்ளார். ஆனால் அவர்கள் குடும்பத்தின் வலுவான பெண் குரல்களையும் ரசிகர்கள் கேட்கும் அரிய தருணமாக இது மாறியிருக்கிறது.  இந்த பாடலை நிகழ்ச்சியில் பங்கேற்ற நேரடி பார்வையாளர்களும் சமூக வலைதள பயனர்களும் வெகுவாக வரவேற்றுள்ளனர்.

மும்பையில் நடைபெற்ற U2 இசைக்கச்சேரி நிகழ்வுக்கு ஒட்டுமொத்த பாலிவுட் உலகமும் திரண்டு வந்திருந்தது. இந்த நிகழ்வில், ‘அஹிம்சா’ என்னும் சிங்கிள் ட்ராக் பாடல் ஒன்றை ரஹ்மான் குடும்பத்தார் பாடினர். U2 என்னும் அயர்லாந்து பாடல் குழுவினர் நடத்திய இசை நிகழ்ச்சியில் ரகுமானும் ஒரு பாடல் பாடியது அங்கு வந்திருந்த ரசிகர்களுக்குப் பெரும் இசை விருந்தாக அமைந்தது குறிப்பிடத்தக்கது

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
Lukk meny
error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது!!