தமிழ்முரசத்தின் பொன்மாலைப்பொழுது மிகச் சிறப்பாக நடைபெற்றது
பொன்மாலைபொழுதின் நிகழ்ச்சிகளாக தாயக பாடல்கள், திரையிசை போட்டி பாடல்கள், சிறப்புரைகள், தமிழே எங்கள் மூச்சு பேச்சு போட்டி உரைகள், நடனங்கள், நாடகங்கள் என அனைத்து நிகழ்வுகளும் மண்டபம் நிறைந்து காணப்பட்ட மக்களின் மனங்களை மகிழ்த்திருந்தது.
அரங்க நிகழ்வுகளில் அகவை பேதமின்றி கலைஞர்கள் பங்கெடுத்திருந்தார்கள் பல காத்திரமான காலத்தின் தேவையான நிகழ்வுகளும் அங்கே அரங்கேற்றப்பட்டிருந்தன
28 ஆவது ஆண்டுகளாக தமிழ் முரசம் காற்றலையில் தேசத்தின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது மேலும் பணியினை ஊக்கப்படுத்தும் முகமாக மக்களின் பேராதரவு மனதுக்கு திருப்தியை அளித்து இருக்கின்றது.
தமிழ்முரசத்தின் பயணத்தில் தோளோடு தோள் கொடுத்து உதவும் எமது உறவுகள் அனைவருக்கும் எமது நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு நிகழ்வில் பங்கெடுத்த அத்தனை கலைஞர்களுக்கும் எமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தமிழ்முரசத்தின் நல்வாய்ப்பு சீட்டிழுப்பு!!
1வது வெற்றி இலக்கங்கள்:173
2வது வெற்றி இலக்கங்கள்:303
3வது வெற்றி இலக்கங்கள்:242