மனித உரிமை ஆணையாளருடன் சிறிலங்கா அவசர பேச்சுவார்த்தை!!

மனித உரிமை ஆணையாளருடன் சிறிலங்கா அவசர பேச்சுவார்த்தை!!

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளருடன் சிறிலங்கா அவசரபேச்சுவார்த்தையொன்றை மேற்கொண்டுள்ளது.

இந்த வாரம் வெளியாகியுள்ள மனித உரிமை ஆணையாளரின் கடுமையான அறிக்கை குறித்தே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன என வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாங்கள் அவரது அலுவலகத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம்,அவர் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் விடயங்கள் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து இணக்கப்பாட்டை எட்டுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளன.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் கடும் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதில் அறிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அரசாங்கம் தற்போது ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துடன் இணக்கப்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள