மரணவீட்டிற்கு சென்ற மகன் பலி தந்தை படுகாயம்!

You are currently viewing மரணவீட்டிற்கு சென்ற மகன் பலி தந்தை படுகாயம்!

உழவு இயந்திரம் – மோட்டார் சைக்கிள் விபத்தில் பதினெட்டு வயதுடைய இளைஞன் ஒருவர் பலியானதுடன் அவரது தந்தை படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை காவல்த்துறை பிரிவுக்கு உட்பட்ட செம்மண்ணோடை கறுவாக்கேணி வீதியில் வைத்தே இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கறுவாக்கேணி வீதியில் இருந்து மீராவோடை நோக்கி வந்த மோட்டார் வண்டி மீது எதிரே வந்த உழவு இயந்திரம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வாழைச்சேனை – விநாயகபுரத்தைச் சேர்ந்த தவசீலன் கிரேஜன் (வயது 18) எனும் இளைஞன் சம்பவ இடத்திலே பலியானதுடன், அவரது தந்தை படுகாயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தந்தையும், மகனும் மரண வீடு ஒன்றுக்கு சென்று கொண்டிருக்கும் போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்த்துறையினர் மேற்கொண்டு வருவதோடு உழவு இயந்திர சாரதியை கைது செய்துள்ளனர்

பகிர்ந்துகொள்ள