மருதங்கேணி சிறீலங்கா காவற்துறையினரால் உயிர் ஆபத்து!!பாதுகாப்பு கோரும் குடும்பப்பெண்!

You are currently viewing மருதங்கேணி சிறீலங்கா காவற்துறையினரால் உயிர் ஆபத்து!!பாதுகாப்பு கோரும் குடும்பப்பெண்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு நேற்று நண்பகல் சென்றிருந்த சிறீலங்கா காவற்துறை சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம் பெறுவதாக பல வீடுகளில் சோதனை நடாத்தியதுடன் மூவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் மருதங்கேணி சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்ப்பட்டனர். பொலிசாரின் இந்த நடவடிக்கையின் போது கு.சிந்துஜா என்பவரது வீடும் சோதனையிடப்பட்டுள்ளது.

அவ்வேளை அங்கு கசிப்போ அல்லது வேறு எந்த பொருட்களும் அங்கு இருக்கவில்லை. அவ்வேளை ஆய்வுகளை நடாத்திக் கொண்டிருந்த சிறீலங்கா காவற்துறையினரை அந்த வீட்டுப் பெண் தனது கைத்தொலைபேசியில் ஒளிப்பதிவு  செய்துள்ளார். இதனை அவதானித்த சிறீலங்கா காவற்துறை உறுப்பினர் அந்த பெண்மணியிடமிருந்து தொலைபேசியை பறித்ததுடன் அப்பெண்ணின் கழுத்தை நெரித்தும் காலால் குத்தியும் தாக்கியுள்ளார்.

இந்நிலையில் சிறீலங்கா காவற்துறையினரால் தாக்குதலுக்குள்ளான பெண்ணிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை மருதங்கேணி சிறீலங்கா காவற்துறையினர்  கடந்த ஒருசில நாட்களுக்கு முன்னர் தனது கணவரையும்  எந்தவிதமான காரணமும் இன்றி, எந்தவிதமா தடயப் பொருட்களும் மீட்காத நிலையில்    கைது செய்து சென்றதாகவும் பின்னர் இரு நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தமது குடும்பத்திற்கு மருதங்கேணி சிறீலங்கா காவற்துறையினரால் உயிர் ஆபத்து உள்ளதாகவும், எனவே தமக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments