மருத்துவ மனையில் பணியாற்றும் சுவீடன் இளவரசி!

மருத்துவ மனையில் பணியாற்றும் சுவீடன் இளவரசி!

இரண்டு பிள்ளைகளின் தாயாரான சுவீடன் இளவரசி சோபியா (35) தலைநகரமான ஸ்ரொக்கோல்ம் மருத்துவமனை ஒன்றில் கொறோனா வைரஸின் தீவிர நிலையைக் கருத்தில் தானும் சேவை புரிய களத்தில் இறங்கினார். அவர் மருத்துவ சேவை புரிவதற்காக வேகமாக “மருத்துவ உதவியாளரிற்கான குறுகிய கால அடிப்படைக் கல்வி ஒன்றை முடித்து அதன் பின் சேவை புரிந்து வருகின்றார்.

“நான் இங்கு நோயாளிகளிற்கான கவனிப்பிலும், சுகாதாரத்தைப்பேணும் வகையில் சுத்தம் செய்வதிலும் ஈடுபட்டு வருகின்றேன். இந்த கடினமான நேரத்தில் உதவி செய்ய எனக்கு ஓர் வாய்ப்பு இருப்பது மனதிற்கு திருப்தியை தருகின்றது” என இவர் “படவரி” குறுஞ்செயலியில் குறிப்பிட்டிருந்தார்.

ஆரம்பத்தில் சுவீடன் இந்த கொள்ளைநோயை எண்ணி அதிகளவு கட்டுப்பாட்டிற்கு ஏற்ப நடவடிக்கைகளை எடுக்காதிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேவேளை தற்பொழுது சுவீடனில் 14’835 பேரிற்கு தொற்றேற்பட்டு, இதில் 550 பேர் குணமாகி, 1540 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் சுவீடன் இளவரசி மருத்துவமனையில் சேவை செய்வது பலரையும் கவனம் கொள்ள வைத்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments