மலேசியாவில் ஈழத்தமிழருக்கு நேர்ந்த கொடூரம் வேதனையுடன் மனைவி வெளியிட்ட தகவல்!

You are currently viewing மலேசியாவில் ஈழத்தமிழருக்கு நேர்ந்த கொடூரம் வேதனையுடன் மனைவி வெளியிட்ட தகவல்!

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவிற்கு கிடைத்த அனுதாபம் கூட தனது கணவருக்கு கிடைக்கவில்லை என மலேசியாவில் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் மட்டக்களப்பைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை விவேகானந்தனின் மனைவி பிருந்தாஜினி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக மையத்தில்   ஊடக சந்திப்பை நடத்திய பிருந்தாஜினி, பாரிய சிரமங்களுக்கு மத்தியிலேயே தனது கணவரின் பூதவுடலை நாட்டுக்கு கொண்டு சென்றதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மலேசியாவில் தற்காலிகமாக வாழ்ந்து வந்த மட்டக்களப்பைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை விவேகானந்தன், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி மலேசியாவைச் சேர்ந்த இருவரால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆண் பிள்ளையொன்றின் தந்தையான இவர் உயிரிழந்துள்ளதை, மலேசிய வாழ் இலங்கைத் தமிழ் அகதிகள் அமைப்பு அறிவித்துள்ளது.

குறித்த நபர் மலேசியாவில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றியவர் என்றும் அகதி அந்தஸ்துக்காக சுமார் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

​இந்த நிலையில், தனது கணவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தனக்கு எந்தவித நீதியோ அல்லது உதவியோ கிடைக்கவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments