மாடுகளை மேய்க்க ஆற்றில் இறங்கிய இளைஞனை இழுத்துச் சென்ற முதலை!

You are currently viewing மாடுகளை மேய்க்க ஆற்றில் இறங்கிய இளைஞனை இழுத்துச் சென்ற முதலை!

மாடுகளை மேய்ப்பதற்காக ஆற்றில் இறங்கிய இளைஞனை முதலை இழுத்துச் சென்ற சம்பவமொன்று வெள்ளிக்கிழமை (டிச. 23) மாலை அம்பாறையில் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி – கல்முனை பகுதிகளை இணைக்கின்ற கிட்டங்கி வாவியில் நண்பனின் ஆலோசனையை கேட்டு,  மாடுகளை மேய்ப்பதற்காக இறங்கிய இளைஞன், மாடுகளை கரையேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, முதலை இழுத்துச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார். 

மாடுகளை மேய்க்க ஆற்றில் இறங்கிய இளைஞனை இழுத்துச் சென்ற முதலை! 1

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞன் சேனைக்குடியிருப்பு 1 பிரிவு 157 விக்னேஸ்வரன் வீதியை சேர்ந்த சுகிர் பிரதாஸ் (வயது-30) என்பவராவார்.

காணாமல் போன இளைஞரை தேடும் பணியில் பொதுமக்களுடன் இணைந்து கடற்படையினர் மற்றும் பொலிஸாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முதலைகளின் பெருக்கம் குறித்த பகுதியில் அதிகரித்துள்ள போதும், முதலைகள் குறித்து பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் அறிவுறுத்தல்களோ எச்சரிக்கை பலகைகளோ இதுவரை உரிய இடங்களில் வைக்கப்படவில்லை. முதலை இருப்பின் அபாயத்தை அறியாமல் இப்பகுதியில்  பயணிப்பவர்கள் முதலையின் பிடிக்குள் அகப்படும் நிலை காணப்படுகிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மாடுகளை மேய்க்க ஆற்றில் இறங்கிய இளைஞனை இழுத்துச் சென்ற முதலை! 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments