மாவட்ட ரீதியில் முதலாமிடத்தை; பெற்ற வஜினா பாலகிருஷ்ணனன் – விரிவுரையாளராவது அவரது கனவு

You are currently viewing மாவட்ட ரீதியில் முதலாமிடத்தை; பெற்ற வஜினா பாலகிருஷ்ணனன் – விரிவுரையாளராவது அவரது கனவு

வெளிவந்த  2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் வஜினா பாலகிருஷ்ணன் மாவட்ட ரீதியில் முதலாமிடத்தையும், நாடளாவிய ரீதியில் 32 இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து அந்த மாணவி கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் பாட விரிவுரையாளராக வர வேண்டும் என்பது தான் எனது கனவு  எனது தந்தை ஒரு மீன் வியாபாரி. பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்று, 2023ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு நான் கலைப்பிரிவில் தோற்றினேன். கலைப்பிரிவில் தமிழ், நாடகவியல் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களுக்கு 3ஏ சித்திகளை பெற்றேன்.

நான் சாந்தை கிராமத்தில் வசிக்கிறேன். எமது கிராமம் ஒரு பின்தங்கிய கிராமம். எமது கிராமத்தில் இருந்து யாழ்ப்பாண ரீதியில் சாதிக்க வேண்டும் என்பதே எனது கனவு. அதனை நிறைவேற்றியுள்ளேன்.

அன்றன்று கற்கின்ற விடயங்களை அன்றே வீட்டில் சென்று படிப்பதனால் கஷ்டம் இல்லாமல் இலகுவாக படிக்க முடியும். ஆசிரியர்கள் கற்பிக்கும்போது கவனத்தை சிதறவிடாமல் கற்க வேண்டும்.

தமிழ் பாட விரிவுரையாளராக வர வேண்டும் என்பது தான் எனது கனவு. என்னை இந்த நிலைக்கு உருவாக்கிய பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

குறித்த மாணவியின் வெற்றியை கொண்டாடுவதற்கு அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரது வீட்டில் குழுமியிருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை

breaking

 

யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி   தேனுஜா சதானந்தன்  வணிகப்பிரிவில்  3ஏ பெறுபேறுகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில்   9 ஏ பெறுபேற்றை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்.மண்ணிற்கும், பெற்றோருக்கும், கற்ற பாடசாலைக்கும் பெருமையை தேடித் தந்த இந்த மாணவியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments