மாஸ்டர் படம் குறித்து வெளியாகிய முக்கிய தகவல்!

மாஸ்டர் படம் குறித்து வெளியாகிய முக்கிய தகவல்!

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இப்போது மாஸ்டர் படத்தின் டிரைலர் மார்ச் 22ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிடவில்லை. ஆனால் இன்று எதிர்பாராதவிதமாக அந்த கண்ண பாத்தாக்கா என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இப்படத்தின் டிரைலரை ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments