மின்சாரம் தாக்கி இராணுவத்தினன் பலி!

You are currently viewing மின்சாரம் தாக்கி இராணுவத்தினன்  பலி!

வவுனியாவின் மகாகச்சக்கொடி – அலுத்வத்த பகுதியில் நேற்று (24) காலை பாதுகாப்பற்றிருந்த மின் இணைப்பில் சிக்கி சிவில் பாதுகாப்புபடை வீரர் உயிரிழந்துள்ளதாக மாமடுவ பொலிசார் தெரிவித்தனர்.

விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட மின் இணைப்பில் சிக்கியே அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வவுனியா மகாகச்சகொடியவில் வசிக்கும் அச்சிந்த திஸாநாயக்க (34) என்பவராவார்.
இறந்த சிவில் பாதுகாப்புப் படை வீரர் அலுத்வத்த காட்டு விலங்குகளைத் துரத்தச் சென்றிருந்தபோது விபத்து நடந்திருக்கலாமென பொலிசார் தெரிவித்தனர்.

பகிர்ந்துகொள்ள