மியான்மார் நாட்டு அகதிகள் யாழ் சிறைச்சாலையில்!

You are currently viewing மியான்மார் நாட்டு அகதிகள் யாழ் சிறைச்சாலையில்!

வெற்றிலைக்கேணியை அண்மித்த கடற்கரப்பில் வைத்து கடற்படையால் அழைத்து வரப்பட்ட மியான்மார் நாட்டு அகதிகள் யாழ். சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

பங்களாதேஷில் இருந்து இந்தோனேசியா நோக்கி செல்ல தயாராக இருந்த நிலையில் படகு பழுதடைந்து தத்தளித்த நிலையில் வெற்றிலை கேணி கடற்பரப்பை அண்மித்த கடற் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் படகு ஓட்டி உட்பட சுமார் 105 பேர் காப்பாற்றப்பட்டனர்.

குறித்த அகதிகள் மியன்மாரில் இருந்து பங்களாதேசில் தங்கி இருந்த முஸ்லிம்கள் என அறியக் கிடைக்கும் நிலையில் இந்தோனேசியா நோக்கி கடல் வழியாக செல்ல தயாராக இருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்தில் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களுக்கான உணவு மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிசாரால் குற்ற பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பொலிசார் நேற்று இரவு அவர்களை நீர்கொழும்புக்கு அனுப்பி வைக்க தயாராக இருந்தனர்.

எனினும் குறித்த அகதிகளில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்கள் காணப்படுகின்ற நிலையில் அவர்களை இரவு நேரம் அனுப்பி வைப்பது தொடர்பில் வாத பிரதிவாதங்கள் எழுந்தன.

குறித்த அகதிகளை அனுப்புவதற்கு போக்குவரத்து ஒழுங்குகளை பொலிசார் உரிய முறையில் மேற்கொள்ளாமல் ஓர் இரு பஸ்களில் அவர்களை அனுப்பி வைப்பதற்கு எடுத்த முயற்சிக்கு உயர் மட்டங்களில் இருந்து எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட நிலையில் யாழ். சிறைச்சாலையில் அவர்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

குறித்த அகதிகள் படகை செலுத்தி வந்தவர் தமிழர் என அறிய கிடைக்கின்ற நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை 14 நாட்கள் தடைப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments