முன்னால் பாராளுமன்ற உறுப்பினருன் முன்னால் இணைப்பாளர் புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைது!

You are currently viewing முன்னால் பாராளுமன்ற உறுப்பினருன் முன்னால் இணைப்பாளர் புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைது!

முன்னால் பாராளுமன்ற உறுப்பினருன் முன்னால் இணைப்பாளர் புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைது!
வன்னியின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் முன்னால் இணைப்பாளர் வேலை பெற்றுதருவதாக ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டுள்ள குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் இணைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்த காலத்தில் அவரின் இணைப்பாளராக செயற்பட்டு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பலரிடம் வேலை பெற்று தருவதாக பணம் பெற்றுள்ளார்.
இன்னிலையில் பாதிக்கப்பட்ட மூவர் புதுக்குடியிருபு;பு பொலீஸ் நிலையத்தில் கடந்த 12.12.2020 அன்று முறைப்பாடு செய்துள்ளார்கள்.
இருவரிடம் தலா 75 ஆயிரம் ரூபா படியும் ஒருவரிடம் 50 ஆயிரம் ரூபாவும் பணம் பெற்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
இன்னிலையில் குறித்த முன்னால் பாராளுமன்ற உறுப்பினரின் முன்னால் இணைப்பாளர் புதுக்குடியிருப்பு பொலீசாரால் கடந்த 13 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு 14 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது மன்று இரண்டுஇலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுவித்துள்ளதுடன் இது தொடர்பான வழக்கு 2021 ஆம் ஆண்டு மார்ச்மாதம் 23 ஆம் திகதி திகதியிட்டு உத்தரவிட்டுள்ளது

பகிர்ந்துகொள்ள