முன்னாள் அரசியல் கைதியிடம் மூன்றரை மணிநேரம் விசாரணை!

You are currently viewing முன்னாள் அரசியல் கைதியிடம் மூன்றரை மணிநேரம் விசாரணை!

வவுனியாவில் வசிக்கும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மூன்றரை மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் அரவிந்தனை (ஆனந்தவர்மன்) கடந்த முதலாம் திகதி கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வாக்கு மூலம் பெற வருமாறு அழைப்பாணை வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும் அவர் அன்றைய தினம் தன்னால் வரமுடியாதுள்ளதாக தெரிவித்து நேற்று வாக்குமூலம் வழங்குவதற்காக சென்றிருந்தார். அதனடிப்படையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் 3 ஆம் மாடியில் விசாரணைகள் இடம்பெற்றது. இதன்போது சுமார் மூன்றரை மணிநேரம் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments