முல்லைத்தீவில் ஏரி பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு !

You are currently viewing முல்லைத்தீவில் ஏரி பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு !

முல்லைத்தீவு- மாத்தளன் நந்திகடல் களப்பில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது இன்று(5) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணையை வசிப்பிடமாக கொண்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளார்.

அதனையடுத்து உறவினர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இன்றையதினம் நந்திக்கடல் களப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அம்பலவன் பொக்கனை புதுமாத்தளன் பகுதியைச் சேர்ந்த 27 அகவை உடைய றாய சீலன் ராஜ்குமார் என்பவரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை முல்லைத்தீவு சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply