முல்லைத்தீவில் கொடூரம்; கழுத்து நெரித்து கொல்லப்பட்ட வர்த்தகர் !

You are currently viewing முல்லைத்தீவில் கொடூரம்; கழுத்து நெரித்து கொல்லப்பட்ட வர்த்தகர் !

முல்லைத்தீவு – முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் சிறுவியாபார வணிக நிலையம் நடத்திவந்த வர்த்தகர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையில் குறித்த வர்த்தகர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் வணிக நிலையம் நடத்திவந்த வணிகர் ஒருவர் நேற்று உயிரிழந்த நிலையில் வணிக நிலையத்திற்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் 68 வயதுடைய அமிர்தலிங்கம் தனபாலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளின் போது அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதை தொடர்ந்து சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன், முள்ளியவளை சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments