முல்லைத்தீவில் மூன்று தனிமைப்படுத்தல் நிலையங்களில் 427 பேர்!

முல்லைத்தீவில் மூன்று தனிமைப்படுத்தல் நிலையங்களில் 427 பேர்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினரின் கண்காணிப்பில் உள்ள மூன்று தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களில் 427 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள்.
கேப்பாபிலவு விமானப்படைத்தள கண்காணிப்பு நிலையத்தில் 222 பேரும், கேப்பாபிலவில் உள்ள 59 ஆவது படைப்பரிவின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் 84 பேரும் புதுக்குடியிருப்பு திம்புலி பகுதியில் அமைந்துள்ள 68 ஆவது படைப்பிரிவின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் 121 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் 
இவர்கள் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் மற்றும் தெற்கில் படையிரின் நிர்வாக செயற்பாடுகளில் கடமையாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது இவர்களிடம் கட்டம் கட்டமாக பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பகிர்ந்துகொள்ள