முள்ளிவாய்க்கால் கடற்கரையில் பிதிர்க்கடன் செலுத்த ஏற்பாடு!

You are currently viewing முள்ளிவாய்க்கால் கடற்கரையில் பிதிர்க்கடன் செலுத்த ஏற்பாடு!

தமிழின படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, எதிர்வரும் 18 ஆம் திகதி பிதிர்க்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு அறிவித்துள்ளது.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தங்களுடைய உறவுகளுக்கான பிதிர்க்கடன் செய்ய விரும்புகின்ற உறவுகள் எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி காலை 7:00 மணி முதல் ஒன்பது முப்பது மணி வரை கப்பல் வீதியிலே உள்ள கடற்கரை பகுதியில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இடத்திலே இந்த பிதிர் கடன்களை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகவும் உறவுகளை கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்

இதற்காக மக்கள் எந்த ஒரு பொருட்களையும் கொண்டு வர தேவையில்லை எனவும் தாங்கள் தங்களுடைய உயிரிழந்த உறவுகளின் பெயருடன் வருகை தந்து அவரடைய பெயரை கூறி விசேடமாக தமிழ் மொழி மூலமாக அவர்கள் பிதிக்கடன்களை செய்ய உள்ளதாகவும் எனவே கடந்த முறை போன்று தங்களுடைய உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் செய்ய விரும்புகின்ற உறவுகள் எதிர்வரும் மே மாதம் 18ம் தேதி காலை 7:00 மணி முதல் ஒன்பது முப்பது மணி வரை வருகை தந்து தங்களுடைய உறவுகளுக்கான பிதிர்க்கடன்களை செய்வதோடு அன்றைய தினம் பத்து முப்பது மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments