யாழில் இடம்பெற்ற விபத்தில இருவர் பலி ஜவர் காயம்!

யாழில் இடம்பெற்ற விபத்தில இருவர் பலி ஜவர் காயம்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவரும், சிறுவன் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இவ் விபத்துச் சம்பவம் நேற்று நண்பகல் ஏ-9 நுணாவில் வைரவர் கோவில் சந்திப் பகுதியில் இடம்பெற்றது. அப் பகுதியில் உள்ள ரயர் கடை ஒன்றில் தரித்து நின்ற பவுசர் வாகனத்துடன் யாழில் இருந்து கொடிகாமம் நோக்கி வந்த கார் பின்புறமாக மோதியதில் இவ் விபத்து சம்பவித்துள்ளது. இதில் காரில் பயணித்த ஐவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரும், சிறுவன் ஒருவரும் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள