யாழில் இராணுவ வாகனம் விபத்து – இரு இளைஞர்கள் படுகாயம்!

You are currently viewing யாழில் இராணுவ வாகனம் விபத்து – இரு இளைஞர்கள் படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும் , மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் , மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலாலி இராணுவ முகாமை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த , இராணுவத்தினருக்கு சொந்தமான பவுசர் வாகனம் , புன்னாலைக்கட்டுவன் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் விபத்துக்கு உள்ளானது.

அதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் சிறீலங்கா  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments