யாழில் தவறான முடிவெடுத்த 2 பிள்ளைகளின் தந்தை!!

You are currently viewing யாழில் தவறான முடிவெடுத்த 2 பிள்ளைகளின் தந்தை!!

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து  உயிர் மாய்த்துள்ள துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

வங்கி வீதி, ஆவரங்கால் மேற்கு பகுதியைச் சேர்ந்த  40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குடும்பஸ்தர் கடந்த சில நாட்களாக மனைவியை பிரிந்து உறவினர் வீட்டில் வசித்து வருகிறார்.

அந்தவகையில் நேற்றையதினம் வயலுக்கு பயன்படுத்தம் மருந்து போத்தல் ஒன்றை வாங்கி சென்று, தான்  உயிரை மாய்க்கப்போவதாக மகளிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் இன்று காலை அவர் படுக்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

நஞ்சு அருந்தியதாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply