கனடா நாட்டுக்கு போக முற்பட்டு போக முடியாத பொருளாதார பிரச்சினை காரணமாக இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஆரியகுளம் சந்திக்கு அருகாமையில் உள்ள வளவு ஒன்றில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
சம்பவ இடத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (22) சென்ற யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டதுடன், சாட்சிகளை யாழ்ப்பாண சிறீலங்கா காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.