ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் அவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவு.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மலர்தூபியும் அகவணக்கம் செலுத்தியுள்ளது.

தராகி சிவராம் மற்றும் ரஜிவர்மனின் நினைவேந்தல் வடமராட்சி ஊடக இல்லத்தில்…
ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் அவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவு.
சம நேரத்தில் ஏனைய ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களினால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராக்கி சிவராம் மற்றும் செல்வராசா ரஜிவர்மன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மெழுவர்த்தி ஏத்தியும், மலர்தூபியும் அகவணக்கம் செலுத்தி வணக்கம் செலுத்தினர்.
நிகழ்வில் யாழ் பல்கலைைக்கழ ஊடகத் துறை விரிவுரையாாளர் ரகு ராம் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராாசா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுுரேஸ் பிரேமச்சந்திரன் , முன்னாாள் வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் ,ஊடகவியலாளர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டடிருந்தனர்.
ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இனம் தெரியாதவர்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்ட பின்னர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் இலங்கை நாடாளுமன்றத்துக்கு அருகில் சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை கடந்த 2007ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 29ம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், அவர்களின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
