யாழில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி!

You are currently viewing யாழில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி!

யாழில்  மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த இராமசாமி சிறிகாந்தன் (வயது 48) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குடும்பஸ்தர் பழைய சிறீலங்கா காவற்துறை நிலைய வீதி, சுன்னாகம் பகுதியில் பூவரசு மரத்தின் தடியை வெட்டியுள்ளார். இதன்போது அந்த தடி மின் கம்பியில் விழுந்துள்ளது.

இந்நிலையில் அவர் மீது மின்சாரம் கடுமையாக தாக்கியதால் நிலத்தில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் அவரது சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply