யாழ்ப்பாணத்தில் அமெரிக்க துணைத் தூதுவர் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் சந்திப்பு! 

You are currently viewing யாழ்ப்பாணத்தில் அமெரிக்க துணைத் தூதுவர் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் சந்திப்பு! 

இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக அமெரிக்க துணை தூதர் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண சபை அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தரப்புக்கள் தனியாகவும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ், வாசுகி சுதாகர் ஆகியோர் தனியாகவும் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது சமகால நிலைமைகள் தொடர்பில் அமெரிக்க துணைத் தூதர் அரசியல் பிரதிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் அமெரிக்க துணைத் தூதுவர் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் சந்திப்பு!  1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments