யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வசதிகளை மேம்படுத்துவதற்கும் இந்தியா உதவும்!

You are currently viewing யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வசதிகளை மேம்படுத்துவதற்கும் இந்தியா உதவும்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வசதிகளை மேம்படுத்துவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – சென்னைக்கு இடையேயான அலையன்ஸ் எயார் விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதை குறிக்கும் வகையில் நேற்று விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது ஒலிப்பரப்பட்ட பதிவு செய்யப்பட்ட உரையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த சேவையின் மேம்படுத்தலுக்காக இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த பாக்லே, இந்தியாவுக்கும் யாழ்ப்பாணம் மற்றும் இலங்கையின் பிற இடங்களுக்கு இடையே நேரடி மற்றும் விரைவான விமானப் பயணம், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

இது இரு நாட்டு மக்களிடையே பாரம்பரிய உறவுகளை வலுப்படுத்துவதுடன் வணிகத்தின் சிறிய மற்றும் நடுத்தர பிரிவுகளுக்கும் பயனளிக்கும் என்றும் பாக்லே குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் இன்று இலங்கைக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இலங்கையில் சீனாவின் அதிகரித்து வரும் செயற்பாடுகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இலங்கை – இந்திய கடல் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் அவரின் இந்தப்பயணம் அமையவுள்ளது,என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments