யாழ்.உரும்பிராயில் மருத்துவரின் குடும்பம் உட்பட 17 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!

You are currently viewing யாழ்.உரும்பிராயில் மருத்துவரின் குடும்பம் உட்பட 17 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!

யாழ்.திருநெல்வேலி சந்தையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபரினால் உரும்பிராயில் 17 குடும்பங்களை சேர்ந்த 70ற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். 

குறித்த தொற்றாளர் உரும்பிராயில் உள்ள மருத்துவர் ஒருவர் தனது வீட்டில் நடத்திவரும் கிளினிக்கிற்கும் சென்றுவந்த நிலையில் மருத்துவரின் குடும்பம் உட்பட 17 குடும்பங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். 

மேலும் குறித்த நபருக்கு மருதனார்மடத்திலும் வர்த்தக நிலையம் ஒன்று உள்ளதாக கூறப்படுகின்றது

பகிர்ந்துகொள்ள