முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வடக்கு, கிழக்கு தமிழர் தாயகமெங்கும் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில், இன்றையதினம் (16 .05.2025) வட தமிழீழம் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாட்டில் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.
இதன்போது மாணவர்கள் மற்றும் மக்கள் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி அருந்திச் சென்றதை அவதானிக்க முடிந்தது










