யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

You are currently viewing யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால்  இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

 

 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை (09) ஒரு மணிநேர வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுவதுடன் அதன் அடையாளமாக நண்பகல் 12மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஊழியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்! 1

பல்கலைக்கழக கல்வி சாரா பணியாளர்களின் பிரச்சனைக்கு உடனடி தீர்வு வேண்டும், மின்சாரம் எரிபொருள் எரிவாயு பொருட்களின் விலைகளை குறை, நியாயமற்ற வரிக் கொள்கையை உடனடியாக திருத்து, சம்பள முரண்பாட்டினை தீர்க்கும் குழுவின் அறிக்கையினை உடனடியாக நடைமுறைப்படுத்து, அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீளவும் திறந்து கல்வி உரிமையை உறுதிப்படுத்து, பல்கலைக்கழக விவகாரங்களில் கல்வி அமைச்சரின் மௌனம் ஏன் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்! 2

இதன்போது கருத்து தெரிவித்த போராட்டகாரர்கள் மார்ச் 15ம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் தீர்வு கிடைக்காவிட்டால் தொடர்ச்சியாக போராட்டம் இடம்பெறும் என்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments