“ரஷ்யாவின் தாக்குதலை சந்திக்க மேற்குலகம் தயாராக இருக்கவேண்டும்” – அமெரிக்க இராணுவம்!

You are currently viewing “ரஷ்யாவின் தாக்குதலை சந்திக்க மேற்குலகம் தயாராக இருக்கவேண்டும்” – அமெரிக்க இராணுவம்!

உக்ரைன் போரில் தனது இராணுவ வீரர்களின் இழப்பை ரஷ்யா(Russia) சந்தித்தபோதும், மேற்கு நாடுகளை எவ்வாறு தோற்கடிப்பது என்பதை புடின் தரப்பு கற்றுக்கொள்கிறது என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, ரஷ்ய படைகளின் இறப்பு எண்ணிக்கை 465,000க்கும் அதிகம் என பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய அமெரிக்க இராணுவத்தின் V Corps படை போலந்தில் நிலைகொண்டுள்ள நிலையில் அதன் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சார்லஸ் கோஸ்டான்சா ரஷ்யா இராணுவம் குறித்து மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

”உக்ரைன் படையெடுப்பிற்கு முன்பிருந்தே ரஷ்யாவின் இராணுவம் பலத்த துருப்பு இழப்புகளை சந்தித்துள்ளது. மேலும், மேற்கத்திய போர் நுட்பங்கள் மற்றும் உபகரணங்களை எவ்வாறு தோற்கடிப்பது என்பதை ரஷ்யா கற்றுக் கொள்கிறது.

ரஷ்யா நிறைய இழப்புகளை சந்திக்கிறது. அவற்றை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், மறுகட்டமைப்பதற்கும் சிறிது நேரம் எடுக்கும் என்ற தவறான எண்ணம் கொஞ்சம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

எனக்கு அந்த பார்வை இல்லை. ரஷ்யாவின் படைகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. அவர்கள் மேற்கத்திய நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

எவ்வாறு நவீன தாக்குதலை தோற்கடிப்பது என்பதை ரஷ்யா கற்றுக் கொள்கிறது. மேலும் நாங்கள் விரைவில் தயாராக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments