ரஷ்யாவின் பெரிய போர்க் கப்பலை அழித்த உக்ரைன் விமானப்படை!

You are currently viewing ரஷ்யாவின் பெரிய போர்க் கப்பலை அழித்த உக்ரைன் விமானப்படை!

உக்ரைன் மீது ரஷ்யா தனது ராணுவ துருப்புக்களை அனுப்பி கடந்த இரண்டு ஆண்டுகளாக தாக்குதலை தொடந்து வருகின்றது. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகின்றது. இந்தப் போரில் உக்ரைன் ராணுவத்திற்கு பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன.

மேலும் ரஷ்யாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.

இந்த நிலையில், ரஷ்யாவின் போர்க் கப்பலை அழித்துள்ளதாக உக்ரைன் விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, உக்ரைனின் விமானப்படைத் தளபதி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,

டிசம்பர் 26 அன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 03.47 மணிக்கு உக்ரைனிய விமானிகள் ரஷ்ய கடற்படையின் நோவோசெர்காஸ்க் என்ற பெரிய போர்க் கப்பலை அழித்தனர்.

ரஷியாவின் கடற்படை சிறியதாகி வருகிறது. விமானப்படை விமானிகளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments