லெபனானுக்கு எதிராக போர் தொடுப்போம் இஸ்ரேல் எச்சரிக்கை…! ஹிஸ்புல்லா நடத்திய கடும் தாக்குதல்!

You are currently viewing லெபனானுக்கு எதிராக போர் தொடுப்போம் இஸ்ரேல் எச்சரிக்கை…! ஹிஸ்புல்லா நடத்திய கடும் தாக்குதல்!

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதல்களில் ஏழு இஸ்ரேலிய வீரர்கள் உள்ளிட்ட 17 பேர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் கடும் கோபம் அடைந்துள்ளது.

எனவே லெபனானுக்கு எதிராக போர் தொடுக்கும் அபாயம் இருப்பதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

மேலும் தெரியவருகையில், ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலிய இராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்து வரும் நிலையில், தற்போது லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையிலான எல்லையிலும் மோதல்கள் அதிகரித்துள்ளது.

காசா மக்களுக்கு ஆதரவாக லெபனான் நாட்டை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

நேற்று ஒரு மணி நேரத்திற்குள் 15 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் அவற்றில் நான்கு ஏவுகணைகளை இஸ்ரேல் இராணுவம் தாக்கி அழித்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதல்களில் ஏழு இஸ்ரேலிய வீரர்கள் உள்ளிட்ட 17 பேர் காயமடைந்துள்ளர்.

ஹிஸ்புல்லாவின் ஏவுகணை ஆயுதக் களஞ்சியம் ஹமாஸின் ஆயுதக் களஞ்சியமாக இருப்பதாக நம்பும் இஸ்ரேல், லெபனானுக்கு எதிராக முழுமையான போருக்கான அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments