வடகொரியாவின் ஐந்து ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக தென் கொரிய தெரிவிப்பு!

You are currently viewing வடகொரியாவின் ஐந்து ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக தென் கொரிய தெரிவிப்பு!

தென் கொரிய எல்லைக்குள் ஊடுரிவிய வடகொரியாவின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் பொதுவான, விவாதத்திற்குரிய பகுதியிலேயே வடகொரியாவின் ஐந்து ஆளில்லா விமானங்கள் ஊடுருவியதாக கூறப்படுகிறது. ஆனால் தென் கொரியா குறித்த ட்ரோன்களை கண்காணித்து வந்ததுடன் சுட்டும் வீழ்த்தியுள்ளது.

இதில் ஒரு ட்ரோன் தலைநகர் சியோலுக்கு மிக அருகாமையில் வட்டமிட்டு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ராணுவத்தின் கோரிக்கையை ஏற்று Incheon மற்றும் Gimpo விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் புறப்பட இடைநிறுத்தப்பட்டது.

சுமார் ஒருமணி நேரம் விமானங்கள் ஏதும் குறித்த இரு விமான நிலையங்களில் இருந்தும் புறப்படவில்லை என்றே தகவல் வெளியானது. மேலும், விமானங்கள் இடைநிறுத்தப்பட்டதன் பின்னணி, இந்த ட்ரோன்கள் ஊடுருவல் மட்டுமா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என்பது தொடர்பில் அதிகாரிகள் தரப்பு தகவல் வெளியிட மறுத்துள்ளனர்.

முதலில் விமானத்தில் இருந்து சுட்டு எச்சரிக்கை செய்ததாகவும், பின்னர் ஐந்து ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாகவும் தென் கொரியா அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக வடகொரிய ட்ரோன்கள் தென் கொரியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனிடையே, வட கொரியா தனது சமீபத்திய ஆயுத சோதனைகளில் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்ததாக தென் கொரியா கூறிய மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.

திங்களன்று நடந்த ஊடுருவலை வடகொரியாவின் தெளிவான ஆத்திரமூட்டும் செயல் என்று தென் கொரிய இராணுவ அதிகாரி ஒருவர் காட்டமாக விமர்சித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments