வடகொரிய வீரர்களை அவர்களின் தலைவரிடம் ஒப்படைக்க தயார்!

You are currently viewing வடகொரிய வீரர்களை அவர்களின் தலைவரிடம் ஒப்படைக்க தயார்!

ரஷ்யாவில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள குர்ஸ்க் பகுதியில் 2 வடகொரிய வீரர்களை உக்ரைனின் பாதுகாப்புப் படையினர் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, குர்ஸ்க் பகுதியில் வட கொரிய இராணுவ வீரர்களை நமது வீரர்கள் சிறைபிடித்துள்ளனர். காயமடைந்த 2 வீரர்கள், கீவ் -க்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இப்போது பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது எளிதான காரியமல்ல. உக்ரைனுக்கு எதிரான போரில் வட கொரியாவின் ஈடுபாட்டிற்கான எந்த ஆதாரத்தையும் விட்டுவைக்காமல் அழிக்க களத்தில் சண்டையிட்டு காயமடைந்த வட கொரிய வீரர்களை அவர்களே கொலை செய்வார்கள்.

இதை முறியடித்து 2 வட கொரிய வீரர்களை எங்கள் படை சிறைபிடித்துள்ளது பாராட்டத்தக்கது.

அனைத்து போர்க் கைதிகளையும் போலவே, இந்த 2 வட கொரிய வீரர்களும் தேவையான மருத்துவ உதவியைப் பெறுகிறார்கள்.

இந்தக் கைதிகளை பத்திரிகையாளர்கள் அணுக அனுமதிக்குமாறு படையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். என்ன நடக்கிறது என்பது பற்றிய உண்மையை உலகம் அறிய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

இதேவேளை

வடகொரிய வீரர்களை அவர்களின் தலைவரிடம் ஒப்படைக்க தாம் தயாரென்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் சிக்கியுள்ள தங்கள் வீரர்களை விடுவிக்க வடகொரியாவின் கிம் ஜோங் உன் முயற்சிகள் முன்னெடுப்பார் என்றால், பதிலுக்கு வடகொரிய வீரர்களை ஒப்படைக்க தாம் தயார் என்றே ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். முதல் முறையாக உக்ரைன் படையிடம் உயிருடன் சிக்கியுள்ள வடகொரிய வீரர்களுடன், மேலும் பலர் மிக விரைவில் சிக்குவார்கள் என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply