வடமராட்சி இளையோரின் கவனத்திற்கு!

You are currently viewing வடமராட்சி இளையோரின் கவனத்திற்கு!

தமிழ் பேசும் மக்களின் வாழும் உரிமையை உறுதி செய்யும் வகையில் நீதிகோரி பொத்துவிலில் ஆரம்பித்து வடக்கு கிழக்கு சிவில் அமைப்பினரால் முன்னெடுத்துவரும் மக்கள் எழுச்சிப் பேரணி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் அளவில் வடமராட்சி எல்லையை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தின் உயிர்நாடி வழியே விடுதலைக்கு வழிசமைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் குறித்த பேரணியை வரலாற்றுச் சிறப்பு மிக்க வடமராட்சி எல்லையில் வரவேற்க அணி திரண்டு வாருங்கள்.

வடமராட்சி எல்லைப்பகுதி ஆரம்பமாகும் வல்லைவெளி இரும்புப் பாலத்தடியில் இருந்து அணிவகுக்க வடமராட்சி இளையோர் ஆர்வத்துடன் முன்வந்துள்ளனர்.

வடமராட்சியில் சிறந்த வரவேற்பை வழங்கி பேரணியில் பங்கேற்று பலம் சேர்க்க முன்னெடுத்த ஏற்பாட்டிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இது கட்சி, அரசியல் கடந்த இனத்திற்கான அழைப்பு.

எமது உணர்வு! எமது உரிமை! என்ற பொதுமை அடையாளத்தில் அணிதிரள்வோம் வல்லைவெளியில்…..

வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேசங்களில் உள்ள விளையாட்டுக் கழகங்கள், இளையோர் அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் நாளை ஞாயிற்றுக் கிழமை நண்பகல் (சுமார் 12.00 மணிக்கு) அளவில் ஒன்றிணைய ஆயத்தமாகுங்கள்.

நெல்லியடி நகர், பருத்தித்துறை நகர், சுப்பர்மடம் பகுதி உள்ளிட்ட பல இடங்களில் வரவேற்பு வழங்கவும், அணி சேரவும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை உத்தேச வழிப்பாதையான வல்லைச்சந்தி – நெல்லியடி சந்தி – பருத்தித்துறை நகரம் – பருத்தித்துறை துறைமுகம் – கடற்கரை வீதியூடாக பொலிகண்டி சென்றடைய உள்ளது.

குறித்த வழித்தடத்தில் உள்ள ஆர்வலர்களும் நீதிக்கான பேரணியை வரவேற்கவும், அணி சேர்ந்து பலம் சேர்க்கவும் முன்வரவும்.

எமது உணர்வு! எமது உரிமை!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை இணைவோம் தமிழர்களாய்!

பகிர்ந்துகொள்ள