வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

You are currently viewing வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நேற்று  ( 05)   இரவு குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளையுடைய 49 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணி அளவில் அவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டவேளை அயலவர்களால் மருதங்கேணி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு இன்று வந்த மருதங்கேணி சிறீலங்கா காவற்துறையினர் சடலத்தை பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீதிமன்ற நடவடிக்கைகளின் பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்படவுள்ளது

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments