வடமராட்சி மந்திகை சாரையடி பகுதியில் விபத்து – 3 பேர் காயம்!

You are currently viewing வடமராட்சி மந்திகை சாரையடி பகுதியில் விபத்து – 3 பேர் காயம்!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை சாரையடிப் பகுதியில் நேற்று இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இரு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்டபோதே, இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

மோதுண்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன், காயமடைந்த மூவரும், மந்திகை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் அல்வாய் நாவலடி பகுதியைச் சேர்ந்த இராசரத்தினம் கெளதமன் (வயது 39), பருத்தித்துறை விநாயகர் முதலியார் வீதியைச் சேர்ந்த கந்தன் திலகினியன் (வயது 23), பருத்தித்துறை மேற்கு சந்தை வீதியைச் சேர்ந்த அரோன்குமார் அருளாளன் ஆகியோரே காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் சிங்கள  சிறீலங்கா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply