வட்டுவாகல் பகுதியில் இரண்டாவது நாளாக காணி அபகரிப்பு முயற்சி!

You are currently viewing வட்டுவாகல் பகுதியில் இரண்டாவது நாளாக காணி அபகரிப்பு முயற்சி!

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள ‘கோத்தபாய கடற்படை கப்பல் ‘கடற்படை முகாமுக்காக 617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு நடவடிக்கை இன்றும் இரண்டாவது நாளாக இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிந்த காணி உரிமையாளர்கள் பலர் கடற்படை முகாமிற்கு முன்னால் ஒன்றுகூடி எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அளவீட்டு நடவடிக்கை இடம்பெறும் என அறிந்து மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கடற்படைமுகாம் முன்பாக கூடி எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் கொழும்பிலிருந்து வருகைதந்த நில அளவையாளர்கள் குழு ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலக காணி பகுதி அலுவலகங்களை அளவீட்டு நடவடிக்கை இடம்பெறும் இடத்துக்கு கடற்படை வாகனம் ஒன்றில் இரகசியமாக துப்பாக்கி முனையில் அழைத்து சென்று காணிகளில் அளவீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக அறிந்த காணி உரிமையாளர்களான தமிழ் மக்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்டவர்களும் கோத்தபாய கடற்படை முகாம் வாசலை மறித்து எதிர்ப்பு நடவடிக்கியில் ஈடுபட்டிருந்தனர்.

மக்களின் எதிர்ப்பையும் மீறி மாற்று பாதையை பயன்படுத்திய கடற்படையினர் காணிகளில் அளவீட்டு நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்திருந்த நிலையில் காணி உரிமையாளர்களும் மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட செயலகம் சென்று மேலதிக மாவட்ட செயலாளர் கனகேஸ்வரன் மற்றும் மேலதிக மாவட்ட செயலர் (காணி) குணபாலன் ஆகியோரை சந்தித்து இரகசியமுறையிலான காணி அளவீட்டுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு தமது காணிகளை எந்த நிலையிலும் கடற்படை தேவைகளுக்கு சுவீகரிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதை பதிவு செய்ததோடு இன்றையதினம் இடம்பெற்றுவரும் நில அளவீடு சட்ட விரோதமானது என்பதோடு காணி உரிமையாளர்களின் பங்கேற்பு இன்றி இடம்பெற்றுவரும் இந்த நடடிக்கை தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் இராணுவ மயமாக்கலுக்கு உடந்தையானது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மாவட்ட செயலக அதிகாரிகள் முன்னிலையில் தெரிவித்தார்.

வட்டுவாகல் பகுதியில் இரண்டாவது நாளாக காணி அபகரிப்பு முயற்சி! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments