வல்வெட்டித்துறையில் எரிந்த நிலையில் கணவன், மனைவியின் சடலங்கள்! 

You are currently viewing வல்வெட்டித்துறையில் எரிந்த நிலையில் கணவன், மனைவியின் சடலங்கள்! 

வல்வெட்டித்துறை – நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை – நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது -30) அவரது மனைவி கிருசாந்தினி (வயது -26) என்ற இருவருமே சடலமாக காணப்படுகின்றனர்.

வல்வெட்டித்துறை சிறீலங்கா காவற்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தம்பதி உறங்கிய அறையில் தீ பற்றி எரிவதைக் கண்டு அறையை உடைத்து உள்நுழைந்த போது இருவரும் தீயில் எரிந்து சடலமாகக் காணப்பட்டனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சிறீலங்கா காவற்துறையினர் கூறினர்.

வல்வெட்டித்துறையில் எரிந்த நிலையில் கணவன், மனைவியின் சடலங்கள்!  1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments