வவுனியாவில் நபரொருவரை மூர்க்கத்தனமாக தாக்கிய கும்பல்!

You are currently viewing வவுனியாவில் நபரொருவரை மூர்க்கத்தனமாக தாக்கிய  கும்பல்!

வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்கள் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்கு வாகனம் ஒன்றை கொள்வனவு செய்யும் நோக்கில் சென்ற குடும்பஸ்தர் மீது வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாகனமொன்றில் வந்த சிலர் மூர்க்கத்தனமாக தன் மீது தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாக தாக்குதலுக்கு இலக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குடும்பஸ்தர் பொலிசாரிடம் வாக்கு மூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார் .

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், 

கடந்த செவ்வாய்க்கிழமை வவுனியாவில் வாகனம் ஒன்றை பார்வையிடுவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற நிலையில், அங்கிருந்து செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் யாழ்ப்பாணத்திற்கு திரும்புவதற்காக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பேருந்திற்காக காத்திருந்தபோது மகேந்திரா வாகனம் ஒன்றில் வந்திறங்கிய ஆறு பேர் கொண்ட குழுவினர் என் மீது சரமாரியான தாக்குதல் நடாத்திவிட்டு என்னிடம் இருந்த தங்க நகைகளையும் அபகரித்துக்கொண்டு செல்ல முற்பட்டபோது அதில் ஒருவர் என்னை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததுடன் எங்களை காட்டிக்கொடுத்தால் வைத்தியசாலையிலிருந்து திரும்ப வீடு செல்ல மாட்டாய் என்று அச்சுறுத்திவிட்டு சென்றுள்ளனர். 

எனவே என்னை கொலை செய்யும் நோக்கில் இடம்பெற்ற இச்சம்பவத்தினால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன் எனவே எனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது . 

பொலிசார் சீ.சீ.டீ.வி. காணொளியின் உதவியுடன் பக்கச்சார்பின்றிய விசாரணைகள் நடாத்தி சந்தேக நபர்களைக் கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மேலும் பாதிக்கப்பட்டநபர் தெரிவித்துள்ளார் .

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments