வவுனியாவில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் வீதியில் கிடந்த இருவர்!

You are currently viewing வவுனியாவில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் வீதியில் கிடந்த இருவர்!

வவுனியா சிதம்பரபுரம் சிறீலங்கா காவற்துறை பிரிவுக்குட்பட்ட கோமரசங்குளம் பகுதியில் விவசாய பண்ணைக்கு அருகே 24ஆம் திகதி வெட்டுக்காயங்களுடன் வீதியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் வீதியில் கிடந்த இருவர்! 1

குறித்த பகுதியூடாக பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் சென்றுகொண்டிருந்த சமயத்தில் வீதியில் வெட்டுக்காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்ட ஒருவரை நோயாளர் காவு வண்டியின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார். அத்துடன் மேலும் ஒருவரும் குறித்த பகுதியில் வெட்டுக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போத்தல்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தினாலே இருவரும் காயங்களுக்குள்ளாகியுள்ளதாவும் அவர்களின் வயது 50, 53 எனவும் சிறீலங்கா காவற்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருவதுடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிதம்பரபுரம் சிறீலங்கா காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments